Loading...
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொது விடுமுறை அளித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் நவம்பர் 8-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் மற்றும் மாணவர்களும் மீண்டும் பணிக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்ப ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி அளிக்கப்படும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் நவம்பர் 28-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனத் தமிழக அரசு அந்த அரசாணையில் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்க்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT