Loading...
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் 3 தனிப்படைகளால் கைது
கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் 3 தனிப்படைகளால் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
12:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் குறித்து அவதூறாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வேலூர் மாநகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை சென்னை புழல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.100 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறை வளாகத்தின் வெளியே திரண்ட திமுகவினர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டு அமளியில் ஈடுபட்டனர். அங்கு இருந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சைப் பேச்சு

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு

"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருக்க வேண்டும், அன்னைக்கே அவரைப் போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" என முதலமைச்சர் விஜயைக் குறிப்பிட்டுக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தொடர்ந்து, புழல் காவல் நிலைய போலீசார் டீட்டா சரவணன் மீது BNS சட்டத்தின் கீழ், கலகம் விளைவிக்கும் நோக்கில் வன்முறையைத் தூண்டுதல், கிரிமினல் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான டீட்டா சரவணனைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது அவர் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.

ADVERTISEMENT