முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது: முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை வியாழக்கிழமை, காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறவுள்ளது. தவெக அரசு கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடைபெறும் 3-ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட 436 திட்டங்களுக்காக முதல் அமைச்சரவைக் கூட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த ஜூலை 16 அன்று 2-ஆவது அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்ற நிலையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்திற்குப் பின் கூடும் முதல் கூட்டம் என்பதால் இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சட்டம் ஒழுங்கு ஆய்வு
தொழில் முதலீடுகள் மற்றும் அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க முன்வந்துள்ள பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும், முன்னணி நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்புதல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் பல புதிய தொழில் கொள்கைகளுக்கும் இதில் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.
கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க பேட்டரி எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை (BESS) ஊக்குவிப்பது குறித்து முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்துவது, துறைசார்ந்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.