Loading...
மீனவ பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்; உலக மீனவர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து
உயிர், உடைமைகளை பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களுக்கு முதல்வர் விஜய் மீனவர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீனவ பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்; உலக மீனவர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
12:20 pm

செய்தி முன்னோட்டம்

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும் இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு அயராது உழைக்கும் மீனவப் பெருமக்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்கள் உயிரையும் உடைமைகளையும் பணயம் வைத்துத் தொழிலில் ஈடுபடும் மீனவ மக்களின் தியாகத்தையும் உழைப்பையும் பாராட்டியுள்ள அவர், "தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மகத்தான அர்ப்பணிப்பு

மீனவ சமுதாயத்தின் நலன்களை பேணி பாதுகாப்போம் என உறுதி

மேலும், மீனவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்துப் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், "மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.

மீனவப் பெருமக்களின் நலன்களை எப்போதும் பேணிப் பாதுகாப்போம்!" என உறுதியளித்துள்ளார். உலக மீனவர் தினத்தையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தி மீனவ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT