காசி தமிழ் சங்கமம் 5.0: கன்னியாகுமரி - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டிற்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசி (வாரணாசி) நகரத்திற்கும் இடையிலான பழமையான கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் 'காசி தமிழ் சங்கமம் 5.0' விழா வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் காசிக்கு செல்ல ஏதுவாக, கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் இருந்து பனாரஸ் ரயில் நிலையத்திற்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நேர அட்டவணை
கன்னியாகுமரி - பனாரஸ் சிறப்பு ரயில்கள்
முதல் சேவையாக, வண்டி எண் 06041 கன்னியாகுமரி - பனாரஸ் சிறப்பு ரயில் நவம்பர் 25 மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் (06042) டிசம்பர் 1 இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.
இரண்டாவது சேவையாக, வண்டி எண் 06051 ரயில் டிசம்பர் 3 மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் (06052) டிசம்பர் 9 இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.
பெட்டிகள் விவரம்
முக்கிய ரயில் நிலையங்கள்
இந்தச் சிறப்பு ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்லார்ஷா, ஜபல்பூர், சத்னா மற்றும் பிரயாக்ராஜ் சியோகி ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
மொத்தம் 20 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்களில் 5 ஏசி 3-டயர் பெட்டிகள், 10 ஏசி எகானமி பெட்டிகள், 3 ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Kashi Tamil Sangamam 5.0: Special Train Services Announced!
— Southern Railway (@GMSRailway) November 17, 2026
Train No. 06041 | Kanniyakumari – Banaras Express Special
Departure: 25th November 2026 (Wednesday)
From: Kanniyakumari at 14:30 hrs
Arrival: Banaras at 20:00 hrs (Friday)
Train No. 06042 | Banaras – Kanniyakumari… pic.twitter.com/Kf6ypXuXoF