இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: செய்தி
ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 274 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நான்காவது மீட்பு விமானம் இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள்
இஸ்ரேல் பாலஸ்தீனியம் இடையான போர் குறித்து ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகளின் குழுவான 'இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு' தலைமையில், சவுதி அரேபியாவில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு
தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்
இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் நேற்று நடந்த இஸ்லாமிய தாக்குதலில் ஒரு ஆசிரியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, கூடுதலாக 7,000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு
பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் உடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறோம் என்று லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர்
காசா பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.
வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் பயங்கரவாத குழு டெலிகிராம் சேனலில் பரப்பி வருகிறது.
காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்
காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மனித உயிரிழப்புகள் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் அச்சம்; உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்
பாதுகாப்பு கருதி உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்திய அணி விலக முடிவு செய்துள்ளது.
24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
காஸா பகுதிக்கு வடக்கில் வாழும் அனைவரையும் தெற்கு நோக்கி, 24 மணி நேரத்தில் வெளியேற, இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஐநா சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் இன்று மதியம் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிலிருந்து, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை நேற்று தொடங்கியது மத்திய அரசு.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த உள்ளடக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எக்ஸ்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரைத் தொடங்கிய பால்ஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உருவாக்கப்படும் பல்வேறு கணக்குகள் நிகழ் நேரத்தில் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் சிஇஓ லிண்டா யாக்கரினோ.
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்!
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இஸ்ரேலுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.
போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை
ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரில் புதிய அணி உருவாவதை, காஸா பகுதியில் இஸ்ரேலின் செயல்பாடுகள் தான் தீர்மானிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது.
இஸ்ரேலின் இரும்புக் குவிமாடம் ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாக்க தவறியது, ஏன்?
கடந்த வாரம், அதாவது, 1973-இல் அரபு-இஸ்ரேல் போர் வெடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த மறுநாள், காசா பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ஏவியது.
ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போரில், இஸ்ரேலில் தங்கி இருக்கும் பல நாடுகளின் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது?
இஸ்ரேல் மீதான தாக்குதலைக் குறிப்பிடாமல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.
இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், மூத்த இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்க இன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு
சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?
2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது,
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர்
இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், பழுது பார்க்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் இராணுவமும் உளவுத்துறையும் தோற்றுவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு திட்டமிட உதவியது ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தான் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் போரால், உலகமே இரண்டாக பிரிந்துள்ளது.
காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?
ஹமாஸ் ஏன் அக்டோபர்-6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது என்பதை அறிய 1973ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போர் குறித்து நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.