இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: செய்தி
2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு
இஸ்ரேலுக்குள் அல் ஜசீரா என்ற தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது.
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது
சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது
காசாவுடனான இஸ்ரேலின் போரைக் கண்டித்து பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நேற்று போராட்டங்கள் தீவிரமடைந்தன.
ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு
தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை
இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி
அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது.
ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது.
காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.
வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்
ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. அகதிகள் முகமைக்கான(UNRWA) நிதியுதவியை சனிக்கிழமை இடைநிறுத்தின.
இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதத்தை கட்டுப்படுத்தவும், "கடுமையான உடல் அல்லது மன பாதிப்பு" ஏற்படுவதைத் தடுக்கவும் சர்வதேச நீதிமன்றம்(ICJ) வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.
சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.
காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ
காசாவில் உள்ள பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டிடத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) குறிவைத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்
வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?
ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
செங்கடலில் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, ஹூதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வெளி தாக்குதலில், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.
வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.