Page Loader
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி

உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Mar 01, 2024
03:51 pm

செய்தி முன்னோட்டம்

உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய ஹமாஸ் இது ஒரு "அசிங்கமான படுகொலை" என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதை மறுத்துள்ள இஸ்ரேல், கூட்ட நெருக்கடியால் தான் அந்த 112 பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது. காசாவை சேர்ந்த 2.4 மில்லியன் மக்களுள் பெரும்பாலோர் ரஃபாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள், இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தொடர்வதால் பஞ்சம் மற்றும் பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

காசா 

உணவு மற்றும் மருத்துவ உதவி அனுப்பப்படுவதை தாமதப்படுத்தும் இஸ்ரேல் 

இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியான கமெல் அபு நஹெல் என்பவர், "உணவு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டவுடன் குடியிருப்பாளர்கள் நள்ளிரவில் விநியோக இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உணவு டிரக்கைச் சுற்றி திரண்டவுடன், ​​அதை அச்சுறுத்தலாக கருதிய இஸ்ரேலிய துருப்புக்கள், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது." என்று கூறியுள்ளார். காசாவுக்குள் உணவு மற்றும் மருத்துவ உதவி அனுப்பப்படுவதை பல வாரங்களாக இஸ்ரேல் தாமதப்படுத்தி வருகிறது. காசாவில் உள்ள மக்கள் உணவு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு கப்பல்கள் மூலம் உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.