இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதத்தை கட்டுப்படுத்தவும், "கடுமையான உடல் அல்லது மன பாதிப்பு" ஏற்படுவதைத் தடுக்கவும் சர்வதேச நீதிமன்றம்(ICJ) வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது. எனினும், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடுவதை ஐக்கிய நாடுகளின் உயர் நீதிமன்றம் நிறுத்தியுள்ளது. காசா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தென்னாபிரிக்கா கோரியதை அடுத்து உலக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவில், "இஸ்ரேல் ஆயுதப்படை வீரர்கள் இனப்படுகொலை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காசாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளது.
இனப்படுகொலை குற்றசாட்டை நிராகரித்தது இஸ்ரேல்
இந்த உத்தரவை நிலைநிறுத்த இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு ஐநா நீதிமன்றம் இஸ்ரேலை கேட்டுக் கொண்டது. இருப்பினும், ஐநா நீதிமன்றத்திற்கு இதற்கான எந்த அமலாக்க அதிகாரமும் இல்லை. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவில், இஸ்ரேல் தனது ஆயுதப்படை வீரர்கள் இனப்படுகொலை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காசாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவுக்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இனப்படுகொலை குற்றசாட்டை நிராகரித்ததுடன், தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையானதை இஸ்ரேல் தொடர்ந்து செய்யும் என்றும் கூறினார்.