இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: செய்தி
நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் கஃபர் அஸ்ஸா பகுதியை பார்வையிட்டனர்.
நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட்டது.
பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது
வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தனர்.
தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் செல்லும் எலான் மஸ்க்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரங்களையும் பார்வையிடுகிறார்?
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று முதல் துவங்கியிருக்கும் நிலையில், அடுத்த வாரம் எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது
கிட்டத்தட்ட கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், திட்டமிட்டபடி நான்கு நாள் போர் நிறுத்தம் தற்போது தொடங்கியது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்
திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்
காசாவில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை வரை தாமதமாகியுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்
தன்னுடைய எக்ஸ் தளத்தின் மூலமாக பெறப்படும் வருமானத்தை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ரெட் கிராஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க போவதாக எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது
தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத செயல்கள் தொடர்பான காட்சிகள் தற்போது பரவி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்
வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?
செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு
சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு
இன்று நடைபெற்று வரும் இந்தியா Vs ஆஸ்திரேலியா ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, 'ஃப்ரீ பாலஸ்தீனம்' என்ற டி-சர்ட் அணிந்த ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
'5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்
50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், சில தசாப்தங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.
மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்
பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
காசாவை கடந்த 16 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஹமாஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மீதான தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியது.
அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார்.
'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாகவும் இஸ்ரேலுக்கு உடந்தையாகவும் இருப்பது அமெரிக்கா தான் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா
பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்
காசா பகுதி மீது குண்டு வீசுவதையும், அங்கு வாழும் பொதுமக்களைக் கொல்வதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்
காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நடைபெற்றும் நிலையில், இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு ஒன்று இந்திய பொருளாதாராத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.
இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்
நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை?
பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸை தடை செய்யும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.