இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது
சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்போது, நாடு முழுவதும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை ஊக்கப்படுத்திய மாணவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டங்களை தொடர விரும்புவதாக தெரிவித்தனர். இஸ்ரேல்-காசா போரில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து, மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால், இஸ்ரேலுடனான உறவுகளை அமெரிக்கா துண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
550 இஸ்ரேலிய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இதுவரை கைது
இது போன்ற போராட்டங்கள் யூத விரோதமாக மாறியுள்ளதாகவும், அதனால் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க பயமாக இருப்பதாகவும் சில யூத மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டங்களின் தலைவரான கைமானி ஜேம்ஸ், யூதர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப உறுதியாக கூறியதைக் காட்டும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கைமானி ஜேம்ஸ் மன்னிப்பு கோரினார். ஹமாஸுடனான இஸ்ரேலின் போருக்கு எதிரப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களை கலைக்க போலீசார் இரசாயன எரிச்சல் மற்றும் டேசர்களை பயன்படுத்தினர். மேலும், மொத்தம் 550 இஸ்ரேலிய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இதுவரை அமெரிக்கா முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.