லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் சலே அல்-அரூரி அவரது பாதுகாவலர்களுடன் கொல்லப்பட்டதாக, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஏஎஃப்பி இடம் கூறினார்.
தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட கட்டிடத்தின் இரண்டு தளங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்ததாக மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லெபனானின் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா இயக்கத்தின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், தாக்குதல் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
அல்-அரூரி உயிரிழந்ததை ஹமாஸ் தொலைக்காட்சி உறுதி செய்துள்ள நிலையில், லெபனான் தேசிய ஊடகங்கள் இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
2nd card
காசாவில் தொடர்ந்து கொல்லப்படும் பாலஸ்தீனர்கள்
அக்டோபர்7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
இதன் விளைவாக, கிட்டத்தட்ட 90 நாட்களை நெருங்கும் இப்போரில், 22,185 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹமாஸ் நடத்தும் காசாவின் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் புள்ளிவிவரங்களின்படி, ஹமாஸ் தாக்குதலில் 1,140 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 250 பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்களில் 129 பேர் இன்னமும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
3rd card
பணய கைதிகள் விடுதலை பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்?
பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ், கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கான திட்டத்தை, ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிடம் முன் வைத்ததாக கூறியுள்ளது.
இருப்பினும், அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்பதால், இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த பேச்சுவார்த்தை, எதிர்காலத்தில் மிகவும் இணக்கமான திட்டத்தை நோக்கி முன்னேறலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.