Page Loader
தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது

தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது

எழுதியவர் Sindhuja SM
Apr 25, 2024
12:26 pm

செய்தி முன்னோட்டம்

காசாவுடனான இஸ்ரேலின் போரைக் கண்டித்து பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நேற்று போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல்கலைக்கழக வளாகங்களில் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்ததை அடுத்து, எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் அடக்குமுறையை மேற்கொண்டனர். அதன் பின்னர், பலரை அவர்கள் கைது செய்தனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுவரை நடந்து வந்த போராட்டங்கள் இப்போது ஹார்வர்ட் மற்றும் யேல் உட்பட குறைந்தது ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு பரவியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் 34 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த பல்கலைக்கழகத்தில் 100 மாநில துருப்புக்கள் காவலுக்கு போடப்பட்டுள்ளன. ஹார்வர்டில், பாலஸ்தீனிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் போராட்ட முகாம்களை அமைப்பதற்காக வளாகத்தை முற்றுகையிட்டனர்.

அமெரிக்கா 

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் இருந்த போராட்டக்காரர்கள், காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் உற்பத்தியாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்து விலக வேண்டும் என்று கோரினர். இந்த போராட்டம் ஆரம்பத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் தொடங்கியது. அதன் பின், மதிய உணவு நேரத்தில், சுமார் 200 மாணவர்கள் கூடியிருந்தனர். அந்த பல்கலைக்கழகத்தின் பாலஸ்தீனிய ஒற்றுமைக் குழுவால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தி டெக்சாஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 மாநில துருப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நிறுத்த அந்த பல்கலைக்கழகத்திற்கு வந்தனர்.