காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ
காசாவில் உள்ள பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டிடத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) குறிவைத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பரவலாக பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக, இஸ்ரேலிடம் அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது என NDTV செய்தி தெரிவிக்கிறது. அந்த வீடியோவில், குண்டு வெடிப்புகளுக்கு முன், குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக வளாகம் ஆள்நடமாட்டமின்றி இருப்பது போல தெரிகிறது. பின்னர் வளாகத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் திடீரென வெடித்து, எல்லா திசைகளிலும் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது. இது குறித்து இஸ்ரேலுடன் நட்புடன் இருக்கும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மில்லர், போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இருபக்கமும் அதிகரிக்கும் உயிர்பலி
கடந்த ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த போரினால், காஸாவின் 2.4 மில்லியன் மக்கள்தொகையில், சுமார் 85 வீதமானவர்களை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய ஆதாரங்களை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டு பலரும் இப்போது தங்குமிடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO), 24 ஹெபடைடிஸ் ஏ மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான மஞ்சள் காமாலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கான மேம்பட்ட மருத்துவ உதவி, மற்றும் அவசரத் தேவையை அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த தாக்குதலில், இஸ்ரேலில் 1,140 பேர் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும் பொதுமக்கள். மறுபுறம், குறைந்தது 24,620 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவிக்கிறது.
வைரலாகும் வீடியோ
Does #ısrael going out of hand by doing such acts in so called #Genocide ?? I don't understand that in name of war, they're killing civilians and journalists! Why @UN , @UNHumanRights and other agencies are silent??#GazaGeniocide #gazauniversity https://t.co/YmWgXVN3pm— Darshan Rana (@yours_darsh) January 19, 2024