இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்
ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. அகதிகள் முகமைக்கான(UNRWA) நிதியுதவியை சனிக்கிழமை இடைநிறுத்தின. UNRWAவின் ஊழியர்கள் சிலர் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, 6 நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து UNRWAவுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தியுள்ளன. UNRWA என்பது பாலத்தீன அகதிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வரும் ஒரு முக்கிய அமைப்பாகும். இது குறித்து பேசியிருக்கும் UNRWA கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸரினி, "காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்தக் கூடுதல் கூட்டுத் தண்டனை தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
"UNRWAவை மாற்றப்பட வேண்டும்": இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்
மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக UNRWAவின் ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், UNRWA மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "UNRWA மாற்றி, உண்மையான அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏஜென்சியை நிறுவ வேண்டும்" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றது. அதனை தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் வாழும் காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 24,000+ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்