NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
    போர் இடைநிறுத்தத்திற்காக பேச்சுவார்த்தை தொடருமெனவும் இஸ்ரேல் உணர்த்தியுள்ளது

    வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 29, 2024
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் வேலை முகமைக்கு (UNRWA) நிதியுதவி செய்வதை நிறுத்தும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் ஞாயிற்றுக்கிழமை இணைந்துள்ளது .

    UNRWAக்கான நிதியுதவியை நிறுத்திய பல நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடா ஆகியவை அடங்கும்.

    மறுபுறம், காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரின் இடைநிறுத்தம் மற்றும் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், அவற்றில் "குறிப்பிடத்தக்க இடைவெளிகள்" இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    பேச்சுவார்த்தை

    போர் இடைநிறுத்தத்திற்காக தொடரவிருக்கும் பேச்சுவார்த்தை

    எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், "குறிப்பிடத்தக்க இடைவெளிகள்" என்ன என்பதை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை.

    பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மற்ற தரப்பினரிடமிருந்து வேறு எந்த எதிர்வினையும் அல்லது அறிக்கையும் இது சார்ந்து வெளியிடப்படவில்லை.

    எனினும் இஸ்ரேல் தரப்பு இந்த பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமானது என்றும், அடுத்த வாரத்தில் அவை தொடரும் என்றும் கூறியது.

    அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் கோரிக்கைகளை ஒன்றிணைக்கும் தற்காலிக உடன்படிக்கையை உருவாக்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த 'இடைவெளிகள்' செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த ஒப்பந்தம், போரில் இரண்டு மாத இடைநிறுத்தத்தை முன்மொழிகிறது என்று அறிக்கை கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    ஐநா சபை
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    காசா

    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஐநா சபை

    உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள் உலகம்
    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  இந்தியா
    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இஸ்ரேல்

    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் ஹமாஸ்
    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? ஐநா சபை
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல் ஈராக்
    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025