"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
செய்தி முன்னோட்டம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலால் இரு நாடுகளிடையே போர் மூண்டது.
எட்டாவது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்டு வர 'ஆபரேஷன் அஜயை' மத்திய அரசு தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து நேற்று, 212 இந்தியர்கள் விமானம் மூலம் புதுடெல்லி அழைத்துவரப்பட்டனர்.
அதன்படி 235 இந்தியர்களுடன் நேற்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட இரண்டாவது விமானம் இன்று காலை புதுடெல்லி வந்து அடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தாயகம் வந்தடைந்தவர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல பல்வேறு மாநில பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
#WATCH | Various state governments have sent their representatives to Delhi airport as the second flight carrying 235 Indian nationals from Israel, arrived here today. pic.twitter.com/kuhAMjZWHg
— ANI (@ANI) October 14, 2023