Page Loader
இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள்
ஹமாஸ் ஆய்த குழு மீது, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால் காஸா பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள்

எழுதியவர் Srinath r
Oct 15, 2023
10:15 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீனியம் இடையான போர் குறித்து ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகளின் குழுவான 'இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு' தலைமையில், சவுதி அரேபியாவில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கை குறித்தும், அப்பாவி காஸா மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. தற்போதைய 'இஸ்லாமிய உச்சி மாநாட்டை' நடத்தி வரும் சவுதி அரேபியா, வரும் புதன்கிழமை அன்று இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐநா சபைக்கு அடுத்தபடியாக அதிக நாடுகளை உறுப்பினர்களாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ளது. நான்கு கண்டங்களில் இருந்து 57 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த அமைப்பு, தங்களை "இஸ்லாமிய உலகின் ஒன்றுபட்ட குரல்" எனக் கூறிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது