
'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நேற்று முன்தினம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது.
இந்நிலையில் மேலும், இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் இன்று காலை டெல்லி வந்து அடைந்தது.
அந்த விமானத்தில் வந்தவர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 4 குழந்தைகளும், 16 பெண்களும் அடங்குவர்.
டெல்லி வந்தடைந்தவர்கள் தமிழ்நாடு வர, தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்
#JUSTIN இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் 2ஆவது விமானம் இன்று காலை டெல்லி வந்த நிலையில்,
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 14, 2023
4 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 28 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர் #Isreal #India #TamilNadu #Chennai #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/hE45zPVL3d