Page Loader
ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள்
இந்தியாவின் மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கையாக பார்க்கப்படும் மிஷன் வந்தே பாரத் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் நாடு திரும்பினார்

ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2023
10:33 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போரில், இஸ்ரேலில் தங்கி இருக்கும் பல நாடுகளின் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர்கள் பலரும் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பலரும் அங்கே சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும், இது பற்றிய தகவல்கள் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

card 2

ஆபரேஷன் அஜய்

இந்த நிலையில், நேற்று இரவு, மத்திய அரசு, 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில், இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள போவதாக அறிவித்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை, இந்த நடவடிக்கை மூலம் நாட்டிற்கு பத்திரமாக மீது கொண்டுவருவது தான் திட்டத்தின் நோக்கம். இது போன்ற கடினமான சூழலில், இந்தியா, இதற்கு முன்னரும் வெளியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதில் வெற்றியும் அடைந்துள்ளது. இந்தியா ராணுவம் மேற்பார்வையில் மேற்கொள்ளவுள்ள, இதற்கு முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பற்றி ஒரு பார்வை.

card 3

ஆபரேஷன் காவேரி

சில மாதங்களுக்கு முன்னர் சூடானில் நடைபெற்ற கொரில்லா தாக்குதல்களில் இருந்து இந்தியர்களை காப்பாற்ற, இந்திய அரசு ஆபரேஷன் காவேரியை அறிவித்தது. கடந்த ஏப்ரல் 24 தொடங்கிய இந்த ஆபரேஷன் மூலமாக, கிட்டத்தட்ட 3,852 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

card 4

குவைத் ஏர்லிஃப்ட்

1990-91 'இல் வளைகுடா நாடுகளுக்கு இடையே கடும் போர் ஏற்பட்டது. எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தொடங்கி, யார் தலைவர் என்பது வரை நீண்ட இந்த போரில், வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை குவைத் ஏர்லிஃப்ட் என்ற ஆபரேஷன் மூலமாக இந்தியாவிற்கு மீது கொண்டு வந்தது அப்போதைய மத்திய அரசு. இதன் மூலமாக கிட்டத்தட்ட 1,70,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, தாய் நாடு வந்து சேர்ந்தனர்.

card 5

ஆபரேஷன் மைத்ரி

2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற மிகப்பெரும் பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களை, ராணுவம் மீட்டது. அதோடு, அந்த நாட்டில் தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவும் இந்த ஆபரேஷன் முன்னெடுக்கப்பட்டது. நேபாள ராணுவத்தினருடன் இணைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டது இந்திய ராணுவம். இந்த வெளியேற்ற நடவடிக்கையில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக தெரிகிறது. ஆபரேஷன் ராஹத்: ஏமனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது இந்த ஆபரேஷன் ராஹத்.

card 6

வந்தே பாரத் மிஷன்

கொரோனா காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை, பத்திரமாக வெளியேற்ற இந்த மிஷன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய வரலாற்றில் இது வரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கை இதுவே. கிட்டத்தட்ட 60 லட்சம் இந்தியர்கள், இந்தியாவிற்கு கூட்டி வரப்பட்டனர். பேரிடர் காலத்தில், நாட்டிற்காக இந்த மிகப்பெரும் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினருடன், ஏர் இந்தியா நிறுவனமும் இணைந்து செயல்பட்டது.

card 7

ஆபரேஷன் தேவி ஷக்தி

2021 ஆம் ஆண்டு, தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றிய போது, ஆப்கானிஸ்தானில் சிக்கி இருந்த இந்தியர்களை, இந்திய விமான படை மீட்டது. ஆபரேஷன் கங்கா: ரஷ்யா-உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள், சுற்றுலாவாசிகள் என 2,00,000 மக்கள் மீட்கப்பட்டனர். ஆபரேஷன் தோஸ்த்: இந்தாண்டு சிரியா -துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இந்தியா மக்களை மீட்க இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.