காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாசின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின் போராக மாறியது.
இதில் இரு தரப்பிலும் தற்போது வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பூமியை விட்டு ஹமாஸ் ஆய்தக்குழு துடைத்தெரியப்படும் என சூளுரைத்திருந்த இஸ்ரேல், காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
மேலும் இஸ்ரேல், காஸா மக்களுக்கு 24 மணி நேர காலக்கெடு விதித்து, அவர்களை வடக்கு காஸாவில் இருந்து தெற்கு நோக்கி வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மத்திய கிழக்கு மக்கள்
காஸா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், அங்கு சோதனைகளையும் நடத்தி வருகிறது.
காணாமல் போனவர்களையும் கண்டுபிடிப்பதற்காகவும், ஆயுதங்கள் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டறிவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுத குழுவினர், 150க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டினரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர் என இஸ்ரேல் கூறியிருந்தது.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வரும் இஸ்ரேலின் பதில் தாக்குதலில், 1,900 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் குழந்தைகளாவர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஈரான், ஈராக், ஜோடான் உள்ளிட்ட நாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் போராடிவருகின்றனர்.