பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!
'லியோ' படத்தில், நடிகை திரிஷாவுடன் திரையை பகிர இயலாததை கொச்சையாக வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் முதல் ரிவ்யூவை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.
20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்தினம், மூன்று தசாப்தங்களுக்கு பின் இணையும், தக் லைஃப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக, நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
3டி, ஐமேக்ஸ், 38 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் கங்குவா
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம், 3டி மற்றும் ஐமேக்ஸ்சில் உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாகிறது.
மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது அது மேலும் முற்றியுள்ளது.
"தலைவர்171 திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை": மம்முட்டி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர்171' திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததற்காக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகர் சங்கம் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
புகழ் பெற்ற பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு, கௌரவ முனைவர் பட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை எனவும், தன்னை பலிகேடா ஆக்கி நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சிப்பதாகவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட்
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், தான் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில்,திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள நிதி சார்ந்த சிக்கல்களால், ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் வைரலான நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்
தூம் படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்ததாக, அவரது மகள் சஞ்சனா தெரிவித்தார். அவருக்கு வயது 56.
"பலாத்கார காட்சியே இல்லை": த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்தார் மன்சூர் அலிகான்
சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான், லியோ திரைப்படத்தில் தனக்கு பாலியல் பலாத்கார காட்சிகள் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இயக்குநர் இயக்கும் படத்திற்காக மீண்டும் இணைகிறது மாதவன்-கங்கனா ஜோடி
மதராசபட்டினம், தலைவா, தலைவி, தெய்வத்திருமகள் போன்ற பிரபல படங்களை இயக்கியவர் இயக்குநர் AL விஜய்.
நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியமான சுஷ்மிதா சென், திரைப்பட வாய்ப்பு இல்லாத போது, நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்டதாக சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில், மிஷ்கின் மற்றும் SJ சூர்யா இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ
நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை ஓய்வதற்குள் மற்றும் ஒரு பாலிவுட் நடிகையான கஜோலின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணையும் மோகன்லால், வித்யூத் ஜம்வால்?
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்திற்காக, இயக்குனர் முருகதாஸுடன் இணையும் நிலையில், அப்படத்தில் மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்புக்கு இடைவெளி விட்டு மருத்துவ தொழிலுக்கு திரும்பிய அதிதி சங்கர்?- புகைப்படங்கள் வைரல்
இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் திரையுலகில் அறிமுகமானார்.
கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு
'96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல்
கமல்ஹாசனுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பாடல் மூலமாக வாழ்த்து கூறிய நிலையில், வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமலஹாசன், அவரது உடல் நிலையை கவனிக்க வலியுறுத்தியுள்ளார்.
சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தமிழ் சினிமா உலகில் வளர்ந்துவரும் நடன இயக்குனர்களுள் ஒருவர் தான் சாண்டி மாஸ்டர்.
ஜப்பான் தோல்வி எதிரொலி: அதிக திரையரங்குகளை கைப்பற்றும் ஜிகர்தண்டா டபுள்X
தீபாவளியையொட்டி கடந்த வாரம் வெளியான ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், மேலும் 100 திரைகளில் திரையிடப்பட உள்ளது.
துருவ நட்சத்திரத்திலிருந்து சூர்யா பின்வாங்கியது, விஜய் யோஹனை நிராகரித்த காரணம்..: GVM ஓபன் டாக்
கடந்த ஆறு வருடமாக படப்பிடிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வழியாக முடித்த நிலையில், அப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம்
'விடுதலை-2' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோரை இளமையாக காட்ட, டீ ஏஜிங் (De-Aging) தொழில்நுட்பத்தை இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்
தமிழ் சினிமாவில் 80களில் புகழ்பெற்ற நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து, சொந்த காரணங்களுக்காக விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ட்விட்டர், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு, ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் உருவாகிறது.
ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம்
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம்
வாரணாசியில் படப்பிடிப்பின் போது செல்பி எடுக்க முயன்ற சிறுவனை, நானா படேகர் தலையில் தாக்கிய வீடியோ வைரலான நிலையில், அது படத்தின் ஒரு பகுதி என நினைத்ததாக படேகர் விளக்கமளித்துள்ளார்.
'ஜிகர்தண்டா டபுள் X' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், S.Jசூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் X'.
விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்?
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.