தமிழ் இயக்குநர் இயக்கும் படத்திற்காக மீண்டும் இணைகிறது மாதவன்-கங்கனா ஜோடி
செய்தி முன்னோட்டம்
மதராசபட்டினம், தலைவா, தலைவி, தெய்வத்திருமகள் போன்ற பிரபல படங்களை இயக்கியவர் இயக்குநர் AL விஜய்.
இவர் தற்போது அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர்கள் ஆர்.மாதவன்-கங்கனா ரனாவத் நடிப்பில் புதிய சைக்காலஜிகல் த்ரில்லர் படத்தை இயக்குநர் AL விஜய் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
'தனு வெட்ஸ் மனு'(2011) மற்றும் அதன் தொடர்ச்சியான 'தனு வெட்ஸ் மனு: ரிட்டர்ன்ஸ்'(2015) ஆகிய பாலிவுட் படங்களில் ஏற்கனவே ஆர்.மாதவன்-கங்கனா ரனாவத் ஜோடியாக நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர்கள் 8 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ்-இந்தி படத்திற்காக இணைய உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
இது குறித்த கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பதிவு
Today in Chennai we started filming our new film, a psychological thriller.
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
Other details coming soon.
For now need all your support and blessings for this very unusual and exciting script 🙏 pic.twitter.com/GERsIYLsR7