கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு
'96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில், படத்தை 85 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தியுடன், அரவிந்த்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 96 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், மகேந்திரன் ஜெயராஜு இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் நிலையில், படத்தில் நாயகியாக நடிக்க சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. கார்த்தி26 திரைப்படத்திற்காக, நலன் குமாரசாமி இயக்கும் நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தியின் 25வது படமான ஜப்பான், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.