NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி
    படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட, படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி

    எழுதியவர் Srinath r
    Nov 21, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் முதல் ரிவ்யூவை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தை மும்பையில் பார்க்க நேர்ந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், "படம் அற்புதமாக இருந்தது. சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, சிறந்த காட்சிகளுக்கு இணையான காட்சிகள் உள்ளன"

    "விக்ரம் படத்தில் கூலாக உள்ளார். விநாயகன் படத்தை கொள்ளை அடித்து விட்டார். மிகப்பெரிய நடிகர் பட்டாளம், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர், இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை வாழ்த்தி, படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் ரிவ்யூவை பகிர்ந்த லிங்குசாமி

    Happened to see the final cut of #DhruvaNatchathiram in mumbai & it was just fantastic. well made, visuals on par with the best.@chiyaan was so cool & #vinayakan stole everything in the movie. huge cast & everyone were brilliant. @menongautham congrats brother, u along with…

    — Lingusamy (@dirlingusamy) November 21, 2023

    3rd card

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது ரிவ்யூவை வெளியிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், படத்தின் இரண்டாவது ரிவ்யூவை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உறுதியாக கௌதம் மேனனின் சிறந்த படங்களில் ஒன்றாக இது உருவாகியுள்ளது."

    "சினிமா பார்ப்பவர்களுக்கும், திரையரங்கத்தினரையும் மகிழ்விக்கும், வசூலை குவிக்கும் படமாக இது அமையும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து தொடர்ந்து நல்ல ரிவ்யூகள் வெளியாகி வரும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    இரண்டாவது ரிவ்யூவை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்

    #DhruvaNatchathiram 2nd review from Harris !!

    "One of the best of GVM & Paisa Vasool entertainer"🔥🔥 pic.twitter.com/qInXUtyX3p

    — AmuthaBharathi (@CinemaWithAB) November 21, 2023

    5th card

    துருவ நட்சத்திரம் வெளியீடு தள்ளிப்போகும் அபாயம்?

    துருவ நட்சத்திரம் படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

    படம் தொடர்பான நிதி சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் உரிமையும் இன்னும் விற்கப்படாதது, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பட வெளியீடு தள்ளிப் போவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில், படத்தின் பிரமோஷன் வேலைகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    கௌதம் வாசுதேவ் மேனன்
    இயக்குனர்
    இசையமைப்பாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விக்ரம்

    'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்? கோலிவுட்
    ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் பா ரஞ்சித்
    துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல் திரைப்பட அறிவிப்பு
    'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை கோலிவுட்

    கௌதம் வாசுதேவ் மேனன்

    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது விக்ரம்
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியானது இயக்குனர்
    துருவ நட்சத்திரம் பற்றி நக்கலடித்த எக்ஸ் பயனர் ஒருவரை, தனது பாணியில் மூக்குடைத்த GVM திரைப்பட வெளியீடு
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்

    இயக்குனர்

    'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது  கமல்ஹாசன்
    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா
    இந்தியன் தாத்தாவின் புகைப்படத்தை பகிர்ந்து, கமலுக்கு இயக்குனர் சங்கர் பிறந்தநாள் வாழ்த்து ட்விட்டர்

    இசையமைப்பாளர்கள்

    "இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது கோலிவுட்
    தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் கோலிவுட்
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூர்
    இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025