
இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், தமிழில் திரையரங்குகளில் இந்த வாரம் புதிதாக எந்த திரைப்படம் வெளியாகவில்லை.
இருப்பினும், தமிழில் ஓடிடியில் வெளியாகும் சில படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
லியோ- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் உலகளவில் பல வசூல் சாதனைகளை படித்துள்ளது.
படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், படம் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2nd card
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
சித்தா- நடிகர் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தன் மருமகளை தனியாக ஒரு மகளைப் போல வளர்க்க முயற்சிக்கும் ஹீரோ, அச்சிறுமி மாயமானதும் அவனது உலகம் தலைகீழாக மாறுவதுமே சித்தா படத்தின் கதை.
படம் திரையரங்குகளில் வெளியாகி, எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமான வசூலை பெற்ற நிலையில் தற்போது, நவம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
கண்ணூர் ஸ்குவாட்- மம்முட்டி, விஜயராகவன், கிஷோர், ரோனி டேவிட் உள்ளிட்டோர் நடித்துள்ள கிரைம் திரில்லர் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழில் மொழிமாற்றம் செய்த இப்படம், நவம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.