LOADING...
பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின்?
விக்னேஷ் சிவனுடன் இணையும் எஸ்ஜே சூர்யா,மிஷ்கின்.

பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின்?

எழுதியவர் Srinath r
Nov 17, 2023
01:59 pm

செய்தி முன்னோட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில், மிஷ்கின் மற்றும் SJ சூர்யா இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கைபேசி தொழில்நுட்பத்தை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை, நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்படம் ₹60 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக சொல்லப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதன் ₹20 கோடி சம்பளமாக கேட்டதால், கமலின் தயாரிப்பு நிறுவனம் விளக்கியது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விக்னேஷ் சிவனுடன் இணையும் எஸ் ஜே சூர்யா, மிஷ்கின்