
சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணையும் மோகன்லால், வித்யூத் ஜம்வால்?
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்திற்காக, இயக்குனர் முருகதாஸுடன் இணையும் நிலையில், அப்படத்தில் மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக தயாராகும் படத்தில், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, படக்குழுவினர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வாலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் படக்குழுவினர், இசையமைப்பாளராக அனிருத்தை உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், தான் மோகன்லால் உடன் இணைந்து நடிக்க விரும்புவதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு தெரிவித்திருந்த நிலையில், அந்த விருப்பம் தற்போது நிறைவேற இருக்கிறது.
2nd card
இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் SK23 படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் தற்போது தனது 22வது படத்திற்காக, ரங்கூன் படத்தின் இயக்குனர், ரோகித் பெரியசாமியுடன் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னர் சிவகார்த்திகேயன்-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் ஏலியனை மையமாக வைத்து உருவாகும் முதல் திரைப்படம் அயலான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்காக 4 ஆண்டுகள் உழைத்ததாக இயக்குனர் ரவிக்குமார் கூறியிருந்தார்.