
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு
செய்தி முன்னோட்டம்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ட்விட்டர், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு, ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் உருவாகிறது.
கடும் போட்டிக்கு பின்னர், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் உரிமையை, ஏ24(A24) நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான, வால்டர் ஐசக்சன் எழுதிய எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
2nd card
தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் எலான் மஸ்க்?
அரோனோஃப்ஸ்கி இயக்கிய தி வேல் திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர் பிளாக் ஸ்வான்(2010), மதர்(2017) ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இவர், உளவியல் கூறுகளை உள்ளடக்கிய படங்களை இயக்குவதற்காக அறியப்படுகிறார்.
படத்தில் எலான் மஸ்க்காக நடிக்கும் நடிகர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அது நிக்கோலஸ் கேஜ், ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் ஜெஸ்ஸி ஐசன்பெர்க் ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், படத்தில் தன் கதாபாத்திரத்தில் எலான் மஸ்கே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே தி பிக் பேங் தியரி, அயர்ன் மேன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.