Page Loader

"தலைவர்171 திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை": மம்முட்டி

எழுதியவர் Srinath r
Nov 21, 2023
02:32 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர்171' திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார். மம்முட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள காதல் - தி கோர் என்ற திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அதற்கான பிரமோஷன் வேலைகளில் மம்முட்டி ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற மம்முட்டியிடம், அவர் தலைவர்171 திரைப்படத்தில் நடிப்பதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், அந்த வதந்திகளை தானும் பார்த்ததாகவும், ஆனால் அதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினர் இதுவரை தன்னை அழைக்கவில்லை எனவும், நடந்தால் நன்மை எனவும், நடக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மம்முட்டி