
நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியமான சுஷ்மிதா சென், திரைப்பட வாய்ப்பு இல்லாத போது, நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்டதாக சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
"நான் நெட்ஃப்லிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் தலைவர்களை அழைத்தேன்."
"மேலும், 'என் பெயர் சுஷ்மிதா சென். நான் ஒரு நடிகை, நான் நடிகையாக இருந்தேன், நான் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்" என அவர்களிடம் கூறியதாக, அவர் ஆங்கில நாளேடான மிட் டே(Mid day) அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதா திரையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 2020 ஆம் ஆண்டு ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா தொடர் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
ட்விட்டர் அஞ்சல்
திரையில் தன் கம் பேக் குறித்து பேசிய சுஷ்மிதா சென்
With Aarya, Sushmita Sen got the comeback vehicle she deserved, and we got the actor we missed. How did she end her eight-year hiatus? By calling three streamers and telling them that she wants to lead a project. Join her as she takes us from Miss Universe to the movies, in her… pic.twitter.com/v0N6408TSU
— Mid Day (@mid_day) November 16, 2023
3rd card
தாலி திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை
சுஷ்மிதா இந்த ஆண்டு தொடக்கத்தில், திருநங்கையாக தாலி என்ற வெப்சீரியஸில் நடித்திருந்தார். திருநங்கை செயல்பாட்டாளரான கௌரி சாவந்த் வாழ்க்கையை தழுவி இந்த வெப்சீரிஸ் தயாரிக்கப்பட்டது.
இதில் சுஷ்மிதாவின் நடிப்பு பெரும்பான்மையினரால் பாராட்டப்பட்ட நிலையில், சிலர் அந்த கதாபாத்திரத்தில் திருநங்கையே நடித்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுஷ்மிதா, கௌரி சாவந்தே, தான் அதில் நடிக்க வேண்டும் என கூறும் வரை, தனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறினார்.
மேலும் திரையில் 8 ஆண்டுகள் இடைவெளி குறித்து பேசிய சுஷ்மிதா,ஒரு சிறந்த நடிகராக ஆவதற்கு ஒருவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.