NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்
    ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள்.

    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

    எழுதியவர் Srinath r
    Nov 17, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசு சார்பிலும், இவ்விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    இவ்விழாவில், தொழிலாளர்கள் சங்கமான பெப்சி, முதல் அனைத்து திரையுலக சங்கங்களும் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இவ்விழா நடைபெற உள்ளது.

    2nd card 

    ரஜினி, கமல் பங்கேற்கும் கலைஞரின் நூற்றாண்டு விழா

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், தலைவர் என்.ராமசாமி, நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் நேரில் அழைப்பிதழை வழங்கினர்.

    முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    ரஜினி, கமல் முன்னிலையில் திரையுலகமே இவ்விழாவில் திரளும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில், கலைஞர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்கு குறித்த மலர் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரஜினிக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர் சங்கத்தினர்

    pic.twitter.com/fvKie065GH

    — Ramesh Bala (@rameshlaus) November 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கலைஞர் கருணாநிதி
    ரஜினிகாந்த்
    கமலஹாசன்
    கமல்ஹாசன்

    சமீபத்திய

    வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் வங்க கடல்
    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    கலைஞர் கருணாநிதி

    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை
    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு தமிழக அரசு
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்

    ரஜினிகாந்த்

    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ஜெயிலர்
    'மறக்க மாட்டேன் ரஜினி சார்' - வர்மன் கதாபாத்திர நடிகர் விநாயகம்  உருக்கம் ஜெயிலர்
    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்  ஜெயிலர்
    தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்  லோகேஷ் கனகராஜ்

    கமலஹாசன்

    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் விஜய் டிவி
    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு மெரினா கடற்கரை
    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; இந்தியா

    கமல்ஹாசன்

    நண்பர்கள் தினம் - தமிழ் சினிமாவுலகில் நட்பிற்கு உதாரணமாக விளங்கும் நடிகர்கள்  ரஜினிகாந்த்
    'ஹரா' திரைப்படத்தில் நடிக்கும் சாருஹாசன்  தமிழ் திரைப்படங்கள்
    64 வருடங்களாக தமிழ் திரை உலகை கலக்கும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கோலிவுட்
    சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 புதிய போஸ்டர் இந்தியன் 2
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025