ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ
நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை ஓய்வதற்குள் மற்றும் ஒரு பாலிவுட் நடிகையான கஜோலின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பரவி வரும் கஜோலின் வீடியோவில், அவர் கேமராவிற்கு முன் உடை மாற்றுவது போல் டீப்ஃபேக் வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் உலாவி வந்த அந்த காட்சிகளை, பெரும்பாலானோர் கஜோல் என்று நம்பி விட்ட நிலையில், பூம்லைவ் உள்ளிட்ட சில இணையதளங்கள் இதை போலி என கண்டறிந்தன. ஆங்கில சமூக ஊடக இன்ஃப்ளுயன்சரான ரோஸி பிரீன் என்பவரது, டிக் டாக் வீடியோவை டீப்ஃபேக் செய்து கஜோலின் முகம் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் நடிகைகளின் டீப்ஃபேக் வீடியோக்கள்
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், நடிகை ரஷ்மிகா மந்தனா லிப்டிர்க்குள் செல்வது போன்ற, டீப்ஃபேக் வீடியோ வைரலானது. ஆட்சேபனைக்குரிய வகையில் உடைய அணிந்திருந்த பெண்ணின் வீடியோவில், ரஷ்மிகா மந்தனா முகம் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது. அந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், அது பின்னர் பிரிட்டிஷ்-இந்திய இன்ஃப்ளூயன்சரான ஜாரா பட்டேல் என்பவரின் வீடியோ என கண்டறிப்பட்டது. இது குறித்த புகாரை விசாரித்து வரும் டெல்லி போலீசார், பீகாரைச் சேர்ந்த 19 வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான டைகர் 3 திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் நடித்திருந்த ஒரு காட்சியையும், தவறாக சித்தரித்து டீப்ஃபேக் செய்து பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.