
20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி
செய்தி முன்னோட்டம்
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்தினம், மூன்று தசாப்தங்களுக்கு பின் இணையும், தக் லைஃப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக, நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று வெளியான படத்தின் டைட்டில் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படத்தின் பெரும்பான்மையான முன் தயாரிப்பு வேலைகள் முடிக்கப்பட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை அபிராமி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன், இப்படத்திற்காக இணைவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தில், கமலஹாசன் உடன் அபிராமி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
ஜனவரியில் தொடங்கும் தக் லைஃப் படப்பிடிப்பு
கமல்ஹாசன் உடன், நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளதாக அபிராமி தெரிவித்துள்ளார்.
மேலும், தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு, விருமாண்டி வெளியானதற்கு சரியாக 20 வருடங்களுக்கு பின் தொடங்குவதால், இதை சிறப்பானதாக கருதுவதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் அபிராமி, தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
பீரியாடிக் கேங்ஸ்டர் படமாக உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில், கமலஹாசன், ரங்கராய சக்திவேல் நாயக்கராக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கும் நிலையில், ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.