Page Loader
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நவம்பர் 24 ஆம் தேதி, ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Srinath r
Nov 20, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் மற்றும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான வீடியோ திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றாலும், படம் வசூல் சாதனைகளை முறியடித்து வந்தது. லியோ திரைப்படம் இதுவரை, ₹600 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஓடிடி வெளியிட்டு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

2nd card

40 நாட்களுக்கு பின் உலக அளவில் ஓடிடியில் வெளியாகும் லியோ

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான சில படங்கள் பெரிய வெற்றி பெறாததால், மீண்டும் லியோ திரைப்படத்திற்கான திரைகள் அதிகரிக்கப்பட்டன. திரைகள் அதிகரிக்கப்பட்டதால் லியோ திரைப்படம், தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வந்தது. இதனால் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது, லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் எனவும், நவம்பர் 28 ஆம் உலக அளவில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நவம்பர் 28ல் ஓடிடியில் லியோ