
பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
செய்தி முன்னோட்டம்
புகழ் பெற்ற பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு, கௌரவ முனைவர் பட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான முதல்வர் ஸ்டாலின், துணைவேந்தர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், பாடகி சுசீலாவுக்கு முனைவர் பட்டத்தை, அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள சுசீலா, 5 முறை தேசிய விருது வென்றுள்ளார்.
தமிழில் 1955 ஆம் ஆண்டு வெளியான கணவனே கண்கண்ட தெய்வம் திரைப்படத்தில், சுசீலா பாடகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சுசீலாவிற்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பாடகி பி.சுசிலாவுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#MKStalin #PSusheela #DinakaranNews pic.twitter.com/UPlKomIgo5
— Dinakaran (@DinakaranNews) November 21, 2023