நடிப்புக்கு இடைவெளி விட்டு மருத்துவ தொழிலுக்கு திரும்பிய அதிதி சங்கர்?- புகைப்படங்கள் வைரல்
இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் திரையுலகில் அறிமுகமானார். படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும், தனது துறுதுறு நடிப்புக்காகவும், மேடைகளில் தனது மொக்கை ஜோக்காகவும் பேசப்பட்ட அதிதி, அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தொழில் ரீதியான மருத்துவரான அதிதி சங்கர், தற்போது மருத்துவ உடையில் கையில் கிளவுஸ், கழுத்தில் டேக்குடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதிதி சங்கர், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கும் திரைப்படத்திலும், ராம்குமார் இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ள நிலையில், அவரின் இந்த திடீர் டாக்டர் அவதாரம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.