பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்
இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.
வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல்
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு இடையே நீடித்து வரும் சர்ச்சையால், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது.
உருவாகும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்- இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்
தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை, டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ஜீ ஸ்குவாட்" என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜீ ஸ்குவாட்'(G- Squad) என்ற பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ரவுடி - ஸ்ட்ரீட் இந்தியன் கல்ச்சர் என்ற தனது ஆடை நிறுவனத்தை மீண்டும் ரீலான்ச் செய்துள்ளார்.
டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல்
தமிழில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கனகாவின் சமீபத்திய புகைப்படத்தை, நடிகை குட்டி பத்மினி வெளியிட்டார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா
நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சையால், வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு சிக்கல்?
இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கிடையே நிலவிவரும் மோதல் தற்போது பெரிதாகி உள்ள நிலையில், வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திற்கு அது சிக்கலை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.
காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது
கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.
பணத்துக்காக "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர்- ஞானவேல் ராஜா பேச்சுக்கு பொன்வண்ணன் கண்டனம்
பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து, நடிகரும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான பொன்வண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சை குறித்து சுதா கொங்கரா கருத்து
இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாக இருந்த மோதல், தற்போது பூதாகரமாகி பொதுவெளியில் பேசப்பட்டுவருகிறது.
ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து தற்போது, டீப்ஃபேக்கிற்கு தொழில்நுட்பத்திற்கு ஆலியா பட் இரையாகியுள்ளார்.
நவம்பர் 30-இல் துருவ நட்சத்திரம் வெளியாகிறதா?
'துருவநட்சத்திரம்' திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்தது.
"எனக்கு பிடித்த தமிழ் படங்கள் இவைதான்": பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர்
பாலிவுட்டின் இளம்நடிகர் ரன்பிர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ்-இன் ஏழாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.
நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது.
பருத்திவீரன் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி
'பருத்தி வீரன்' பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் மீது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், நேற்றிரவு அமீர் அறிக்கை ஒன்றினை தனது சமூகவலைத்தள பக்கம் மூலமாக வெளியிட்டிருந்தார்.
மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரந்தீப் ஹூடா. பாகிஸ்தான் சிறையில், இந்திய உளவாளி என சிறையிலடைக்கப்பட்ட சரப்ஜீத் சிங்-கின் கதையை திரைப்படமாகிய போது, அதில் சரப்ஜீத் சிங் கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்றவர் ரந்தீப்.
காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு
2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் வெளியாகி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் காந்தாரா.
வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி
கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை குஷ்பூ உடன் நடந்த உரையாடலில் பேசிய விஜய் சேதுபதி, வில்லனாக நடிப்பதிலிருந்து இடைவெளி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு; உண்மையை உடைத்த நடிகை மனிஷா
நடிகர் மன்சூர் அலிகான்-திரிஷா பற்றிய விவகாரம் இன்று காலை ஓய்ந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்டது.
திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த டைகர் 3 திரைப்படம், தீபாவளிக்கு வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
அக்கா: பாலிவுட் வெப் தொடரில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் பிரிவான ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் , 'அக்கா' என்ற தனது மூன்றாவது வெப் தொடரை தொடங்கவுள்ளது.
"சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்கு பின் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், வெளியாகாது என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு, இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் படம் வெளியாவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.
45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்
தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக்கொண்டிருக்கும் உச்ச நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். இயக்குனர் பாலச்சந்தரின் பாசறையிலிருந்து வந்த முத்துக்கள் இருவரும் என பலரும் கூறுவதுண்டு.
இளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு
இசையமைப்பாளர் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஏஆர் ரஹ்மான் கதாபாத்திரத்தில், சிலம்பரசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில், ரோப் கேமரா அறிந்து விழுந்த விபத்தில், சூர்யா நூலிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அயலான் குறித்து தவறான செய்தி- ஊடக தர்மம் குறித்து கேள்வி எழுப்பிய தயாரிப்பு நிறுவனம்
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் குறித்து தவறான செய்தியை பதிவிட்ட, பிரபல வார இதழுக்கு கட்டணம் தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், அந்த உலகத்தின் தர்மம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம்
நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், காவல் நிலையத்தில் இன்று ஆஜராக சமன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தொண்டையில் ஏற்பட்டுள்ள வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்
இந்தியா-பிரிட்டன் உள்ளிட்ட 2 நாடுகள் ஒன்றாக இணைந்து தயாரிக்கவுள்ள சர்வதேச திரைப்படம் 'லயனல்'(Lioness).
தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
தனுஷ் நடிப்பில் வரும் டிசம்பர் 15 வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா
'90களில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா.
IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி
IMDb என்பது உலகெங்கும் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பாட்காஸ்ட்கள், வீடியோக்கள், வீடியோ கேம்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களின் ஆன்லைன் தரவுத்தளமாகும்.
திட்டமிட்டபடி, நவம்பர் 24 வெளியாகிறது 'துருவநட்சத்திரம்' திரைப்படம்
சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நீண்ட நாளாக இயக்கத்தில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், அறிவிக்கப்பட்டது போல, வரும் நவம்பர் 24, வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.