Page Loader
அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சையால், வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு சிக்கல்?
திட்டமிட்டபடி அமீரும், சூர்யாவும் வாடிவாசல் திரைப்படத்தில் இணைந்து நடிப்பார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சையால், வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு சிக்கல்?

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
02:49 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கிடையே நிலவிவரும் மோதல் தற்போது பெரிதாகி உள்ள நிலையில், வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திற்கு அது சிக்கலை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில், கடந்த 2007 ஆம் ஆண்டு, நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமான, பருத்திவீரன் படம் வெளியானது. இப்படத்தில், ஞானவேல் ராஜா-அமீர் இடையே ஏற்பட்ட மோதல், சினிமா துறை சங்கங்கள் தலையிட்டு சரி செய்ய முடியாததால், உயர் நீதிமன்றம் வரை சென்றது. மேலும், படத்தின் நாயகன் கார்த்தி, அவரது அண்ணன் சூர்யா மற்றும் அவர்களது தந்தை சிவகுமார் ஆகியோர் மீது, இயக்குனர் அமீர் வழக்கு பதிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

௨ந்ட card

சூர்யாவுடன் நடிக்க ஒப்புக்கொண்ட அமீர்

இயக்குனரான அமீர் அண்மை காலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த வடசென்னை திரைப்படம் இவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை பெற்று தந்தது. இந்நிலையில், சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திலும், இவர் நடிப்பதாக ஏற்கனவே வெற்றிமாறன் அறிவித்திருந்தார். இதற்காக அமீரிடம் பேசிய வெற்றிமாறன், சூர்யாவுடன் நடிப்பதற்கு சம்மதமா என கேட்டுள்ளார். அதற்கு அமீர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சூர்யா அமீருடன் இணைந்து நடிப்பாரா என்பது இதுவரை கேள்விக்குறியாகி உள்ளது. சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிக முக்கிய படமாக கருதப்படும், வாடிவாசல் திரைப்படத்தை சுற்றி எழுந்து வரும் சர்ச்சைகள், ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.