Page Loader
"ஜீ ஸ்குவாட்" என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்
புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.

"ஜீ ஸ்குவாட்" என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
05:37 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜீ ஸ்குவாட்'(G- Squad) என்ற பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "5 படங்களை இயக்கிய பின்னர் ஜீ ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தில் முதல் சில படங்களாக, அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் கதைகளை தயாரிக்க உள்ளார். அந்தத் திரைப்படங்களையும் பார்த்து, மகிழ்ந்து தனக்கு வழங்கிய அதே ஆதரவை, வழங்குவீர்கள் என தான் நம்புவதாக அந்த அறிக்கையில் லோகேஷ் கூறியுள்ளார். மேலும், தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அப்டேட்டிற்காக, பொறுமையுடன் காத்திருக்கும் படியும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை