டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏழு வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு, அப்போதிலிருந்து தயாரிப்பில் இருந்து வந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஏற்பட்ட நிறுவத்தொகை பிரச்சனை, தயாரிப்பு நிறுவனத்திற்கு கௌதம் மேனன் ₹2.40 கோடி வழங்க நீதிமன்ற உத்தரவிட்டது, தமிழ்நாடு அளவில் விநியோகஸ்தர் இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் படம் அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என, படம் விநியோகஸ்தர்களிடமிருந்து கேரள திரையரங்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.