வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல்
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு இடையே நீடித்து வரும் சர்ச்சையால், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில், சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குனர் அமீரும், இயக்குனர் வெற்றிமாறனும் வாடிவாசல் குறித்து விவாதிப்பது போன்ற புகைப்படத்தை, வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கிராஸ் ரூட் பிலிம் கோ, "இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில், அவர் கதாபாத்திரம் குறித்து விவாதிக்க இயக்குனர் அமீரை சந்தித்தார்." "அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் கதை எழுதப்படும்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தும்" "இப்படத்தில் அவர் ஈடு செய்ய முடியாத நடிகர்" என அந்த ட்விட் குறிப்பிட்டுள்ளது.
இயக்குனர் அமீரை சந்தித்த வெற்றிமாறன்
ஞானவேல் ராஜா சர்ச்சையால் வாடிவாசலுக்கு என்ன பிரச்சனை?
பருத்திவீரன் திரைப்படத்தில், இயக்குனர் அமீர், நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் ஒன்றாக பணியாற்றியிருந்தனர். இந்த படம் தொடர்பாக ஞானவேல் ராஜாவிற்கும், அமீருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இது பல சினிமா சங்கங்கள் தலையிடும் தீர்க்க முடியாததால் நீதிமன்றம் சென்றது. நீதிமன்றத்தில் அமீர், சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களது தந்தையான சிவக்குமார் மீதும் வழக்கு பதிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், சூரியாவும், அமீரும் வாடிவாசல் திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வெற்றிமாறனின் இந்த சந்திப்பு மூலம், அந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.