
திட்டமிட்டபடி, நவம்பர் 24 வெளியாகிறது 'துருவநட்சத்திரம்' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நீண்ட நாளாக இயக்கத்தில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், அறிவிக்கப்பட்டது போல, வரும் நவம்பர் 24, வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.
இதை படக்குழுவினரும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
முன்னதாக, சட்ட சிக்கலில் படம் சிக்கி இருந்ததாகவும், பண பிரச்னை காரணமாக, படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகக்கூடும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வந்தது, ரசிகர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, இந்த படத்தை பார்த்து, இயக்குனர் லிங்குசாமி, முதல் ரெவ்யூவை வெளியிட்டார்.
அதில், "விக்ரம் படத்தில் கூலாக உள்ளார். விநாயகன் படத்தை கொள்ளை அடித்து விட்டார். மிகப்பெரிய நடிகர் பட்டாளம், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்" எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தயாரிப்பு குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு
John & his ‘Basement’ are all equipped to rewrite the rules of justice in 2 days 💥#DhruvaNatchathiramFromNov24 #DhruvaNakshathramFromNov24#DhruvaNatchathiram #DhruvaNakshathram @chiyaan @menongautham @Jharrisjayaraj @riturv @OndragaEnt @Preethisrivijay @SonyMusicSouth… pic.twitter.com/7EXKyMoOYe
— Oruoorileoru Film House (@oruoorileoru) November 22, 2023