இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு; உண்மையை உடைத்த நடிகை மனிஷா
செய்தி முன்னோட்டம்
நடிகர் மன்சூர் அலிகான்-திரிஷா பற்றிய விவகாரம் இன்று காலை ஓய்ந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்டது.
இதை சுமத்தியது பிஸ்மி என்ற பத்திரிகையாளர். பயில்வான் ரங்கநாதனை போலவே இவரும் சர்ச்சையான கருத்துக்களை கூறுபவர்.
மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையானதும், பிஸ்மி, சீனு ராமசாமி பற்றி கூறினார். அதன்படி, 9 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், 'இடம் பொருள் ஏவல்' என்கிற படத்தை இயக்கினார்.
அப்படத்தின் மூலம்தான், மனிஷா யாதவ் ஹீரோயினாக அறிமுகமானார்.
மனிஷாவிற்க்கு அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் நடிகை மனிஷா யாதவ் அப்படத்தில் இருந்தே விலகிவிட்டதாகவும், இதை மனிஷாவே தன்னிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டதாகவும் பிஸ்மி கூறினார்.
card 2
மறுத்த சீனு ராமசாமி; உறுதி செய்த மனிஷா
இதற்கு பதிலளித்த சீனு ராமசாமி,"அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அந்த நடிகை ஏன் எனக்கு நன்றி சொல்கிறார்" என கேள்வி எழுப்பி, 'ஒரு குப்பை கதை' பட ஆடியோ லாஞ்சில் மனிஷா தனக்கு நன்றி சொன்ன வீடியோவை பதிவிட்டு, மீண்டும் மனிஷாவை இயக்குவேன் என கூறினார்.
இதற்கு தனது சமூகவலைத்தளம் மூலம் பதில் கூறிய மனிஷா,"இசைவெளியீட்டு விழாவில் மேடைக்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவது போலதான், அவருக்கும் தெரிவித்தேன்.9-ஆண்டுகளுக்கு முன்னால் அவரை பற்றி நான் கூறிய கருத்துக்களில் மாற்றமில்லை.என்னிடம் அநாகரீகம் நடந்து கொண்டவருடன் நான் எதற்காக மீண்டும் பணிபுரிய வேண்டும்? சீனு ராமசாமி சார், நீங்கள் உண்மையை பேச வேண்டும்" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம், சீனு ராமசாமி மீது வைக்கப்பட்ட குற்றசாட்டு ஊர்ஜிதமாகிறது