Page Loader
அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல்
குட்டி பத்மினி(இடது), கனகா(வலது).

அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல்

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
03:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கனகாவின் சமீபத்திய புகைப்படத்தை, நடிகை குட்டி பத்மினி வெளியிட்டார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த தேவிகாவின் மகளான கனகா, பின்னணி பாடகராக வேண்டும் என்ற கனவோடு திரைக்கு வந்தவர். இசையமைப்பாளர் கங்கை அமரன் 1989 ஆம் ஆண்டு இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். திரைப்படம் மாபெரும் வெற்றியடைய தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தார். இதுவரை தமிழில் 40 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்துள்ள கனகா, கடைசியாக கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான விரலுக்கு ஏத்த வீக்கம் திரைப்படத்தில், விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

2nd card

அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா

இவர் திரையுலகில் இருந்து விலக மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தற்போது கனகா, கேரளாவில் உள்ள அவரது வீட்டில் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு, நடிகை கனகா புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல நடிகையான குட்டி பத்மினி சமீபத்தில் நடிகை கனகாவை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு, உடல் பருமனுடன் கனகா காட்சியளிக்கிறார். இப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.