
இயக்குனர் அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சை குறித்து சுதா கொங்கரா கருத்து
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாக இருந்த மோதல், தற்போது பூதாகரமாகி பொதுவெளியில் பேசப்பட்டுவருகிறது.
சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில், இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்ட நிலையில், இருவருக்கும் திரைத்துறையினர் அவர்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய ஞானவேல் ராஜா, அப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளர்களாக இருந்த, நடிகர் கார்த்தியும், சுதாவும், அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தை பார்த்ததாகவும்,
அந்த திரைப்படத்தின் மேக்கிங் சரியில்லை என, சுதா கூறியதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சுதா, பருத்திவீரன் அழகு கதாபாத்திரம், "ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை" என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஞானவேல் ராஜாவின் கருத்திற்கு, சுதா கொங்கரா பதில்
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து…
— Sudha Kongara (@Sudha_Kongara) November 26, 2023