NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அக்கா: பாலிவுட் வெப் தொடரில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அக்கா: பாலிவுட் வெப் தொடரில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ் 
    பாலிவுட் வெப் தொடரில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

    அக்கா: பாலிவுட் வெப் தொடரில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 24, 2023
    01:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் பிரிவான ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் , 'அக்கா' என்ற தனது மூன்றாவது வெப் தொடரை தொடங்கவுள்ளது.

    இந்த பழிவாங்கும்- திரில்லர் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது .

    YRF இன் முதல் வலைத் தொடரான ​​'தி ரயில்வே மென்' நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

    அதனை தொடர்ந்து, வாணி கபூரின் க்ரைம் த்ரில்லரான 'மண்டலா மர்டர்ஸ்' தயாரிப்பில் உள்ளது. அதனை தொடர்ந்து அக்கா தொடர் ஒளிபரப்பப்படவுள்ளது.

    இத்தொடர் மூலம், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முதல்முறையாக இணையவுள்ளனர். இத்தொடரின் பெயரின் படி, இவர்கள் இருவரும் இத்தொடரில் சகோதரிகளாக நடிக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.

    card 2

    பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்

    ஆதித்யா சோப்ராவால் அறிமுகப்படுத்தபட்ட எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டியின் சிந்தனையில் உருவானது இந்தத் தொடர்.

    கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியா மொழிகளில் தன்னுடைய முத்திரையை பதித்த பிறகு, தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், தெறி படத்தின் ரீமேக்கில் வருண் தவானுடன் நடிக்கிறார். அதுதான் அவரின் முதல் நேரடி ஹிந்தி திரைப்படமாகும்.

    அதனை தொடர்ந்து தற்போது இந்த 'அக்கா' வெப் தொடரின் மூலம் அவர் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார்.

    அதுவும் ஹிந்தி மொழியிலேயே என்பது கூடுதல் சுவாரசியம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கீர்த்தி சுரேஷ்
    பாலிவுட்
    வெப் சீரிஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கீர்த்தி சுரேஷ்

    முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்  உதயநிதி ஸ்டாலின்
    10 நாட்களில் ரூ.54.9 கோடி வசூல்: மாமன்னனின் வெற்றி பயணம்  கோலிவுட்
    சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை
    மும்பை மாநகரில் ஆட்டோவில் பயணித்த நடிகை கீர்த்தி சுரேஷ்  திரைப்படம்

    பாலிவுட்

    'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்  ரஜினிகாந்த்
    'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல் இயக்குனர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் வெற்றி பயணம்  ஃபேஷன் குறிப்புகள்

    வெப் சீரிஸ்

    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? திரைப்பட துவக்கம்
    2022 ஆம் ஆண்டில் IMDb -ல் இடம் பெற்றுள்ள டாப் 10 வெப் சீரிஸ் தமிழ் திரைப்படங்கள்
    இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள் ஓடிடி
    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் சோனிலைவ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025