Page Loader
இளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு
தனுஷ் மற்றும் சிலம்பரசன் இதுவரை இணைந்து திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு

எழுதியவர் Srinath r
Nov 23, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஏஆர் ரஹ்மான் கதாபாத்திரத்தில், சிலம்பரசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் நிலையில், மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏஆர் ரஹ்மான் தொடர்பான சில காட்சிகள் வருவதால், படத்தில் சிறந்த நடிகரை நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் சிலம்பரசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிம்பு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

2nd card

இளையராஜா பயோபிக் எப்போது வெளியாகிறது?

படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருட தொடக்கத்தில் அல்லது மத்தியில் இளையராஜா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, 2025 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம், இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி இயக்கும் நிலையில், தனுஷின் நடிப்பில், இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றை படமாக வேண்டும் என்பது தனது கனவு என சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், பல முக்கிய நடிகர்களுடன் இப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த அடுத்த நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.