Page Loader
தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல்
துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக சில நாட்கள் எடுக்கும் என இயக்குனர் தகவல்.

தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல்

எழுதியவர் Srinath r
Nov 24, 2023
09:14 am

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், வெளியாகாது என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், திரையரங்குகளில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக படம் வெளியாகாது என இன்று அதிகாலை 3 மணியளவில், இயக்குனர் கௌதம் மேனன், ட்விட்டர் வாயிலாக தெரிவித்தார். "மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் எங்களுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தேவை என்று தெரிகிறது."

2nd card

துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு தொடரும் சிக்கல்கள்

"உலக அளவில் முன்பதிவுகள் மற்றும் சரியான திரைகள் மூலம் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை வழங்க முடியும் என நம்புகிறோம்." "படத்துக்கான ஆதரவு பெரிய அளவில் இருக்கிறது. இது மேலும் எங்களைத் தொடர வைத்திருக்கிறது. இன்னும் சில நாட்கள், நாங்கள் வந்துவிடுவோம்!" என கௌதம் மேனன் பதிவிட்டுள்ளார். திரைப்படத்திற்கான தமிழ்நாடு விநியோகஸ்தர் உரிமை விற்கப்படாதது, நிலுவைத் தொகை பிரச்சினை, 'ஆல் இன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்திற்கு ₹2.40 கோடி வழங்க கௌதம் மேனனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படம் வெளியாவதற்கு தடையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

படம் வெளியாகாதது குறித்து கௌதம் மேனன் விளக்கம்