
அயலான் குறித்து தவறான செய்தி- ஊடக தர்மம் குறித்து கேள்வி எழுப்பிய தயாரிப்பு நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் குறித்து தவறான செய்தியை பதிவிட்ட, பிரபல வார இதழுக்கு கட்டணம் தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், அந்த உலகத்தின் தர்மம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடித்துள்ள அயலான் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், "சிக்கலில் அயலான், சிவகார்த்திகேயன் மில்வாரா?" என்ற அட்டை படத்துடன் பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இது ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனை குறித்தும், அந்த வார இதழின் அணுகுமுறை குறித்தும், தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் விளக்கம் அளித்துள்ளது.
2nd card
அயலான் திரைப்படத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை
இது குறித்து, கேஜேஆர் ஸ்டூடியோவின் விளக்கத்தில், அயலான் படத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அயலான் திரைப்படம் குறித்து போலியான தகவல் வெளியிட்ட அந்த வார இதழை தொடர்பு கொண்டபோது, அந்த வார இதழ் நீண்ட காலமாக அயலான் குழுவினரை எக்ஸ்க்ளூசிவ் செய்திக்காக பின் தொடர்ந்ததாகவும்,
பட குழுவினர் தங்களுக்கு முன்னுரிமை வழங்காமல், வேறு இதழுக்கு முன்னுரிமை வழங்கியதால் இவ்வாறு செய்ததாக அந்த வார இதழ் கூறியுள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு திரைப்படம் குறித்த செய்தியை, எந்த ஊடகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உரிமை, தயாரிப்பாளர் இல்லையா எனவும் அந்நிறுவனம் கேள்வியெழுப்பிள்ளது.
இதுபோன்ற கீழ்த்தரமான செயலை வேறு யாருக்கும் செய்ய வேண்டாம் என, அந்த ஊடகத்திடம் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.